×

பல்லாங்குழியாக மாறிய மன்னை புறவழி சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

மன்னார்குடி: தொடர் கனமழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி பல்லாங்குழி சாலையாக காட்சி அளிக்கும் மன்னை புறவழி சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புறநகர் பகுதியின் பிரதான சாலையாக நியூ பைபாஸ் சாலை அமைந்துள்ளது. இச்சாலை திருமக்கோட்டை, மதுக்கூர் மற்றும் வடசேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.

பல்வேறு ஊர்களில் இருந்து மன்னார்குடி வழியாக திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், முத்துப் பேட்டை நோக்கி செல்லும் ஏராளமான கனரக வாகனங்கள் நகரத்துக்குள் செல்லாமல் எளிதாக செல்ல இந்த சாலை பயன்படுகிறது.
இதில், திருமக்கோட்டை சாலை, மதுக்கூர் சாலை இடையே உள்ள சாலை தற்போது பெய்த மழையால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறி பல்லாங்குழி சாலையாக காட்சி அளிக்கிறது. இச்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள், கனரக வாகனம், ஆட்டோ, வேன்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், கல்லூரி மாணவ, மாணவியர், மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த சாலையால் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

மேலும் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் மன்னை புறவழி சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறு த்தி உள்ளனர்.

Tags : bypass road ,Motorists , Mannarkudi
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு